பரங்கிப்பேட்டையில் 9 செமீ மழை

rain 09-nov-2015
கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில்  9 செமீ மழை பதிவாகியுள்ளது. 
 
மன்னார் வளைகுடா அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, சற்று மேற்கு நோக்கி நகர்ந்து, மன்னார் வளைகுடா முதல் வட தமிழக கடற்கரை வரை நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டின் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டையில் 9 செமீ, சேத்தியாத்தோப்பில் 8 செமீ, திருவிடைமருதூர், கும்பகோணத்தில் தலா 7 செமீ, விருதாச்சலத்தில் 6 செமீ, சிதம்பரம், சீர்காழியில் 5 செமீ, குடவாசல், நன்னிலம் ஆகிய பகுதிகளில் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும்'' என்று பாலச்சந்திரன் கூறினார். 
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru