மாவட்டம் முழுவதும் தொடர் மழை; பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

மாவட்டம் முழுவதும் தொடர் மழை பயிர்கள் தண்ணீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்போது தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டியது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. காலை 5 மணி வரை சாரல் மழையாக பெய்தது. அதன்பிறகு மழை இல்லை. இருப்பினும் இந்த மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. காலையில் வெயில் அடித்ததால் தேங்கி நின்ற மழை நீர் வடிய ஆரம்பித்தது.

இதேபோல் பெலாந்துறை, விருத்தாசலம், கீழ்செருவாய், வானமாதேவி, லக்கூர், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, லால்பேட்டை, குறிஞ்சிப்பாடி, அடூர், மே.மாத்தூர், புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. உளுந்து, எள் பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், பரவனாறு தூர்வாரும் பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் இரவு பெய்த மழையில் பரவனாற்றில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறியது. அவ்வாறு வெளியேறிய தண்ணீர், விளைநிலங்களுக்குள் புகுந்தது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில் நிலத்தடி நீரை வைத்து சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள், மணிலா, எள் உள்ளிட்ட பயிர்கள் இந்த மழையால் மூழ்கி குளம்போல காட்சி அளிக்கிறது. இதனால் பயிர்கள் அழுகி சேதமாகிவிடும். இந்த பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குப்பநத்தத்தில் 95.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. குறைந்தபட்சமாக சிதம்பரத்தில் 14 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 40.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:–
 • பெலாந்துறை – 81
 • விருத்தாசலம் – 72
 • கீழ்செருவாய் – 62
 • வானமாதேவி – 54
 • கடலூர் – 53
 • லக்கூர் – 52
 • சேத்தியாத்தோப்பு – 42
 • கொத்தவாச்சேரி – 40
 • லால்பேட்டை – 35
 • பண்ருட்டி – 35
 • ஸ்ரீமுஷ்ணம் – 32
 • வேப்பூர் – 30
 • மே.மாத்தூர் – 29
 • தொழுதூர் – 28
 • புவனகிரி – 26
 • பரங்கிப்பேட்டை – 23
 • காட்டுமன்னார்கோவில் – 18
 • அண்ணாமலைநகர் – 17
 • காட்டுமயிலூர் – 16
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru