ஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை

ஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை கலெக்டர் ராஜேஷ் எச்சரிக்கை
ஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பணம் வாங்கினால் ஓராண்டு சிறை தண்டனை

இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் 9 தாலுகா அலுவலகங்களிலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் 5 நகராட்சி அலுவலகங்களிலும் வடலூர் பேரூராட்சி அலுவலகத்திலும், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் புதிய ஆதார் பதிவுக்கு கட்டணம் ஏதும் கிடையாது. இது ஒரு கட்டணம் இல்லா சேவை ஆகும். ஆனால் சில தனிநபர்கள் விரைவாக ஆதார் எண் பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக தெரியவந்து உள்ளது.

பொதுமக்களை ஏமாற்றும் இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்த வழிமுறைகளின் படி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நபர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் வழிவைகை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017 10:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru