சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

sfo
கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடலூர் மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடங்களில் செயல்படும் சத்துணவு மையங்களில் உள்ள 400 சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்கள் மற்றும் 597 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட நாளை(புதன் கிழமை) முதல் வருகிற 10–ந்தேதி பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சிகளில் இனசுழற்சி விபரம் மற்றும் காலிப்பணியிட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அந்தந்த ஒன்றியங்கள் மற்றும் நகரங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கான தகுதிகள் வருமாறு:–

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் எனில் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்கலாம். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அவர்கள் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி சத்துணவு மையத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவராக இருக்கவேண்டும்.

சமையல் உதவியாளர் பணிக்கான தகுதிகள் வருமாறு:–

இப்பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் எனில் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்கலாம்.

பழங்குடியினர் எனில் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் எனில் 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் பள்ளிச் சத்துணவு மையத்திலிருந்து 3 கி.மீ. சுற்றளவிற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன், பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச்சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்று,விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் எனில் அதற்கான சான்று, உடல் ஊனமுற்றோர் எனில் அதற்கான தகுந்த சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். வருகிற 10–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே நேர்காணலுக்கு பரிசீலிக்கப்படும். இனசுழற்சி மற்றும் இருப்பிட து£ரச் சுற்றளவிற்குள் வசிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய மற்றும் நகராட்சி ஆணையர் மூலம் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் தனது அறிக்கையில் கூறி உள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017 10:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru