அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தஃபா மரணம்

manavai mustafa
தமிழறிஞர் மணவை முஸ்தபா காலமானார். இவர் எழுதிய 'இசுலாமும் சமய நல்லிணக்கமும்' எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும் இவர் எழுதிய ' மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூல் 1996-ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன. அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் மணவை முஸ்தபா நிறுவி உள்ளார்.  கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, கணினி களஞ்சிய பேரகராதி, செம்மொழி உள்ளும் புறமும், தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் உள்பட ஏராளமான நூல்களை இயற்றியிருக்கிறார்.
 
மணவை முஸ்தஃபா அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து எனும் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 1935ம் ஆண்டு ஜூன் 15ம் நாள் பிறந்தார். முத்தமிழாக அறியப்பட்ட தமிழ் மொழியை “அறிவியல் தமிழ்” என நான்காம் தமிழாக அறியச் செய்ததில் முதன்மையானவர். தமிழின் மீது தீராத பற்று கொண்டவர். அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழியையும் வளப்படுத்திட வேண்டும் என்கிற ஆர்வத்தில் அறிவியல் தமிழை இயக்கமாக்கி செயல்பட்டவர்.
 
அரசினர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆசிரியர் பணியை ஏற்காமல், தென்மொழிகள் புத்தக டிரஸ்ட்டின் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள் பணியாற்றினார். “யுனெஸ்கோ கூரியர்” பன்னாட்டு மாத இதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் அது நிறுத்தப்படும் வரை விடாது அறிவியல் தமிழ்ப் பணியைச் சோர்வின்றி செய்தவர்.
 
அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழில் நுட்பம், அறிவியல், மருத்துவம், கணினி துறையைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தையும் இவர் நிறுவி உள்ளார். இவர் எழுதிய “இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய “மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்” எனும் நூல் 1996ம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.
 
பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் பகழ் பெற்ற அமைப்புகளாவும் நிறுவனங்களாலும் 44 விருதுகளும், பட்டங்களும் பெற்றுள்ள இவர் முக்கியமாக  அறிவியல் தமிழ்ச் சிற்பி, அறிவியல் தமிழ் வித்தகர், அறிவியல் தமிழேறு, முத்தமிழ் வித்தகர், அறிவியல் தமிழருவி, கணினி கலைச் சொல் வேந்தர், அறிவியல் கலைச்சொல் தந்தை. அறிவியல் தமிழ்த் தந்தை போன்ற விருதுகளைப் பெற்றவர். தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஐந்து விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் இவர் மட்டுமே. இவரது வாழ்க்கையும், சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்டு புதுடெல்லி அரசு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
 
மேலதிக தகவல்களுக்கு.... https://ta.wikipedia.org/s/2us  - http://www.ariviyaltamilmandram.org/
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru