முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ. அஹமது ஜனாஸா அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

ahamed-300x213
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் ஜனாஸா 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கண்னூர் சிட்டி ஜாமிஆ மஸ்ஜிதில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கேரள மாநில தலைவர் ஹைதர் அலி சிஹாப் தங்ஙள் ஜனாஸா தொழுகை நடத்தினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இ. அஹமது 31.1.2017 பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றி கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பாட்டுடெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 01.02.2017 அதிகாலை 2.15 மணியளவில் எம்.பி. காலமானார். அவரது ஜனாஸா டெல்லி தீன் மூர்த்தி மார்கில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. 

அங்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். பின்பு இ. அஹமது சாகிபின் ஜனாஸா விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு கொண்டு வரப்பட்டது. விமானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., பி. வி. அப்துல் வகாப் எம்.பி., காங்கிரஸ் எம்.பி. ராகவன், இந்திய தேசிய காங்கிரஸ் செயலாளர் முகுல் வாசினிக், அஹமது சாகிபின் மகன்கள் ரயிஸ் அஹமது, நசீர் அஹமது, மகள் டாக்டர் பௌசியா மருமகன் டாக்டர் சர்ஷாத், அஹமது சாகிபின் உதவியாளர்கள் இஸ்மாயில், ஷபீக், ரயிஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.நேற்று மாலை 5 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இ. அஹமது சாகிப் ஜனாஸா வந்தடைந்தது. 

ஜனாஸாவை விமான நிலையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், தேசிய பொதுச்யெலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி, கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், தமிழ்மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மலப்புரம் மாவட்டத் தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், கேரள இளைஞர் அணி தலைவர் செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள் செய்யது அப்பாஸ் அலி தங்ஙள், தேசிய செயலாளர் அப்துஸ் ஸமது சமதானி, கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் எம்.கே. முனீர், அப்துல் ஹமீது, அப்துர் ரப், இப்ராஹிம் குஞ்சு, மன்னார் காடு சம்சுதீன், டி.வி. இப்ராஹிம், சென்னை கே.எம்.சி.சி. தலைவர் குஞ்சுமோன், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

அதன் பிறகு இ. அஹமது அவர்களுடைய ஜனாஸா கோழிக்கோடு ஹஜ் ஹவுஸ் மற்றும் கேரள முஸ்லிம் லீக் தலைமை நிலையம் லீக் ஹவுஸிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அங்கு கேரள முதல்வர் பினராய் விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, கேரள இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வகட்சி தலைவர்கள், திரளானோர்கள் பார்வையிட்டு இரங்கல் தெரிவித்தனர்.

நேற்று இரவு 01.02.2017 இ. அஹமது அவரது பிறந்த ஊரான கண்னூருக்கு எடுத்து செல்லப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று காலை அவரது இல்லத்திலிருந்து கண்னூர் முனிசிபல் டவுண் ஹாலுக்கும், அவர் தலைவராக இருந்த தீனுல் இஸ்லாம் சபாவுக்கும் எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. 

அதன் பின்னர் கண்னூர் சிட்டி ஜாமிஆ மஸ்ஜிதுக்கு எடுத்து செல்லப்பட்டது. நண்பகல் 12 மணியளவில் ஜனாஸா தொழுகையை கேரள மாநில தலைவர் செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் நடத்தினார். ஜனாஸா தொழுகையில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி, தேசிய செயலாளர்கள் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., அப்துஸ் ஸமது சமதானி, டெல்லி குர்ரம் அனிஸ் உமர், கொல்கத்தா ஷாஹின்ஷா ஜஹாங்கீர், பீகார் நயீம் அக்தர், துணைத்தலைவர் கர்நாடகா தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா, கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி.ஏ. மஜீத், பி.வி. அப்துல் வகாப் எம்.பி., தமிழக பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னாள் எம்.பி.), மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரரசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இஸ்லாமிய அமைப் புக்களின் ஒருங்கிணைப்பாளர் அப்பலோ ஹனீபா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உள்ளிட்ட சமுதாய பிரமுகர்கள், உலமாகள் பங்கேற்று இ. அஹமது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அன்னாரின் மஃபிரத்திற்கு துஆ செய்தனர்.
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru