இடைமறித்துத் தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி

படம்.| டிஆர்டிஓ.
எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது. 

ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து (வீலர் தீவு) காலை 7.45 மணியளவில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

இத்தகவலை பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. தானாகவே இயங்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை ராடார் மூலம் எதிரி ஏவுகணையை சரியாக தடம் காணக்கூடியது. உட்புகுந்து தாக்கக்கூடிய எதிரி ஏவுகணையை ராடார் தகவல்கள் மூலம் பெறுமாறு செய்து இந்த இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru