பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 15 பேர் பலி

 நிலநடுக்கம் காரணமாக காயமடைந்தவர்களுக்கு சாலையின் ஓரத்தில் முகாம் அமைத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. | படம்: ஏபி
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 15 பேர் பலியாகினர். 90 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தரப்பில், "பிலிப்பைன்ஸின் தென்பகுதியான சுரிகாவ் டெல் நோர்டேவை மையமாகக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்திற்கு 15 பேர் பலியாகினர். 90 பேர் காயமடைந்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் சிவில் பாதுகாப்பு அதிகாரி அன்டோனியோ கோன்ஸேல்ஸ் கூறும்போது, "நிலநடுக்கத்தின் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. கட்டிங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்க மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது" என்றார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1990-ம் ஆண்டு பிலிப்பைன்ஸின் லுசான் தீவுப் பகுதியில், ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நில நடுக்கத்துக்கு 2,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru