மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகள் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் இரண்டு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. Trust Fund எனப்படும் உதவித்தொகை 1,500 பேருக்கு மூன்று மாத இடைவெளிகளில் வழங்கப்படும். இளநிலை, முதுநிலை அளவிலான வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு, வாழ்நாளில் ஒரே ஒரு முறை உதவித்தொகை அளிக்கப்படும். இதில் 30% பெண்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. National Fund எனப்படும் உதவித்தொகை 500 பேருக்கு வழங்கப்படும். கூடுதல் விவரங்களைப் பெற www.nhfdc.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள்:

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

Trust Fund உதவித்தொகை பெற வருடத்தின் எந்த ஒரு நேரத்திலும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க முடியும். இந்த உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளியின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மாத வருமானம் 25,000 ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும். மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்கள் வேறு எந்த திட்டத்தின் கீழும் உதவித்தொகை பெறுபவர்களாக இருக்கக் கூடாது. மாதத்திற்கு இரண்டாயிரத்து 500 முதல் 3,000 ரூபாய் வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.

National Fund உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரையும், இதர பிரிவினருக்கு 700 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

உதவித் தொகைகளைப் பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

மாற்றுத் திறனாளிகளுக்கென மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகைகளைப் பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

விண்ணப்பங்களை www.nhfdc.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். ஆன்லைனில் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பிரதி எடுத்து, தற்போது படிக்கும் கல்வி நிறுவன முதல்வரிடம் கையொப்பம் பெற்று அனுப்பவும். விண்ணப்பங்களை National Handicapped Finance and Development Corporation, Red Cross Bhawan, Sector-12, Faridabad - 121 007 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தேவையான சான்றிதழ் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பினால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வருடத்தின் எந்த ஒரு நேரத்திலும் இந்த உதவித் தொகைகளைப் பெற விண்ணப்பக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 0129 - 2226 910 அல்லது 0129 - 2287 512 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru