அறிவியல், கணித மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்

2013 - 2014 ஆண்டிற்கான Kishore Vaigyanik Protsahan Yojana எனப்படும் KVPY திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு அறிவியல் படிக்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஐ.ஐ.எஸ் எனப்படும் அகில இந்திய அறிவியல் நிறுவனத்தின் கீழ் KVPY திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் படிக்கும் காலத்திலே அறிவியில் மற்றும் கணித பாடத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், ஆராய்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித் தொகையானது 3 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. SA, SX பிரிவில் ஓராண்டிற்கு 4 மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் என 20 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் உதவித்தொகை வழங்கப்படும். SB பிரிவில் ஆண்டுக்கு 4 மாதத்திற்கு 7 ஆயிரம் ரூபாய் என 28 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்படும். கல்வி உதவித்தொகை பெறுபவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் சதவீதத்தை தொடர்ந்து பெறும் பட்சத்தில் அடுத்த ஆண்டுக்கும் 4 மாதத்திற்கு கல்வி உதவித்தொகை பெறலாம்.

நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை பெறாத பட்சத்தில் கல்வி உதவித்தொகை பெற தகுதியை இழந்து விடுவார்கள். பல்வேறு பிரிவுகளில் உதவித்தொகை பெறுபவர்கள் கோடைக் காலங்களில் ஒரு வார கால அளவில் நடத்தப்படும் முகாம்களில் கலந்து கொண்டு, வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்கில் பங்கேற்கலாம். கோடைக்கால முகாம்கள் கொல்கத்தா, புனே, மொகாலி, போபால், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

KVPY கல்வி உதவித்தொகை-க்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்:

KVPY எனப்படும் கல்வி உதவித் தொகைக்கு அறிவியல் மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

SA பிரிவில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஓராண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று இருப்பது அவசியம். பட்டியல் இனத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறைந்தது 70 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

SX பிரிவில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஓராண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று இருப்பது அவசியம். பட்டியல் இனத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

SB பிரிவில் கணிதம், அறிவியல், புள்ளியியல் ஆகியவற்றில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., பி.எஸ்., எம்.எஸ்., முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடங்களில் 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.

KVPY கல்வி உதவித்தொகை-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

KVPY கல்வி உதவித்தொகைக்கு இணைய தளம் மற்றும் அஞ்சல் வழியே விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

SA, SX, SB ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். www.kvpy.org.in என்ற இணைய தளம் வழியே விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் இனத்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பங்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Convenor, Kishore Vaigyanik Protsahan Yojana, IIS Bangalore -560 012 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தலைமை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவும், இணைய தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகைக்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி நடைபெறும்.

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru