அரசின் கல்வி உதவித் தொகை

அரசு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் பயிலும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள், இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி பயிலும் பி.சி, எம்.பி.சி., டி.என்.சி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை அவரவர் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in/bcmbcdept என்ற இணைய தளத்தை அணுகவும்.

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru