ஜாப்பனீஷ் மொழித்திறன் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

JLPT எனப்படும் ஜாப்பனீஸ் மொழித்திறன் தேர்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் நேரடியாக ஜப்பானில் சென்று பணிபுரிய விரும்புவோர், ஜாப்பனீஸ் மொழித்திறன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

இதற்கென JLPT தேர்வு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள், பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஜப்பான் நாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், பதவி உயர்வு பெறவும், JLPT தேர்வில் பங்கேற்பது உதவிகரமாக அமையும்.

சென்னையில் JLPT தேர்வு வரும் டிசம்பர் மாதம், ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது. JLPT தேர்வு N1, N2, N3, N4, N5 என்ற 5 தாள்களாக நடைபெறும்.

கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர், rangaots@gmail.com மற்றும் abkaots@gmail.com என்ற முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி பெறலாம். அல்லது 044 - 2374 0318 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

விண்ணப்பங்களை தி‌னந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செப்டம்பர் 6-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். N1 முதல் N5 வரை 5 தாள்களுக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி விண்ணப்பங்களைப் பெறலாம். N1 மற்றும் N2 தாள்களுக்கு தேர்வுக் கட்டணமாக தலா ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். N3 முதல் N5 வரையிலான தாள்களுக்கு தலா 800 ரூபாய் தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கமாக அல்லது வரைவோலையாக எடுத்துச் செலுத்தலாம். வரைவோலையை JLPT Test Administrative Committee, Chennai என்ற பெயரில் எடுக்கவும்.

விண்ணப்பங்கள், JLPT Test Administrative Commitee, ABK-AOTS DOSOKAI, TN centre, 3rd Floor, Cheateau D'Ampa, 37, Nelson Manickam Road, Aminjikarai, Chennai -600 029 என்ற முகவரியில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இதே முகவரியில் சமர்ப்பிக்க செப்டம்பர் 10-ஆம் தேதி கடைசி நாள்.

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2013 14:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru