மக்கா - மதீனா இடையே அதிவேக ரயில்

சவூதி அரேபியாவில் 'ஹரமைன்' என அழைக்கப்படும் அதிவேக ரயில் திட்டத்தின் கீழ் ஜித்தா வழியாக மக்கா – மதீனா புனித நகர்களுக்கிடையிலான அதிவேக ரயில் சேவையின் பணிகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை அடைந்து விரைவில் அதிவேக ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது.
 
பொருளாதார நகரமான ரபிக், மன்னர் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பகுதி ஆகிவையும் இத்திட்டத்தில் இணைந்துள்ளது. இத்திட்டத்தின் ரயில் பாதையின் தூரம் 453 கிலோ மீட்டர்களாகும். மணிக்கு இந்த ரயில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் ஆண்டுக்கு 30 லட்சம் மக்கள் இந்த ரயில்வே தடத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதுமிருந்து புனித பயணமாக சவூதி அரேபியா செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 


ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017 11:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

texnikaiya.ru | grazil.ru | story4baby.ru | best-to-baby.ru | sfera4auto.ru